தர்பூசணியில் கலப்படம்? - எப்படித் தெரிந்துகொள்வது?
"உணவே மருந்து" என்பார்கள்.
ஆனால் கவனிக்காவிட்டால் அதே உணவு நஞ்சாகலாம்.
அண்மையில் இந்தியாவின் மும்பையில் பிரியாணி சாப்பிட்ட சில மணி நேரத்தில் தர்பூசணி உண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மாண்டனர்.
முதற்கட்ட விசாரணையில் தர்பூசணியால் நச்சுணவுப் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஆனால் உறுதியான காரணம் தெரியவில்லை.
விசாரணை தொடர்கிறது.
இந்நிலையில் தர்பூசணிப் பழம் குறித்து புதிய விவாதங்கள் தொடங்கியுள்ளன.
தர்பூசணிகளை வெட்டாமல் ஊசி வழியே அதில் வண்ணத்தையும் இனிப்பையும் சேர்க்க முடியும் என்று Times of India ஊடகம் கூறுகிறது.
தர்பூசணியில் கலப்படம் உள்ளதா என்பதை எப்படித் தெரிந்துகொள்வது?
வெள்ளைக் காகிதம்: பழத்தின் மேற்புறத்தில் வெள்ளை காகிதத்தைத் தேய்க்கவும். நிறம் ஒட்டினால் அது ரசாயனம்.
தோற்றம்: வெளிப்புறத்தில் எலிகள் கடித்த ஓட்டைகள் இருந்தால் தவிர்க்கவும்.
தண்ணீர் சோதனை: வெட்டிய துண்டுகளைத் தண்ணீரில் போடுங்கள். செயற்கை நிறம் இருந்தால் தண்ணீர் சிவப்பாக மாறும்.
பஞ்சு சோதனை: வெட்டிய பழத்தின் மீது பஞ்சைத் தேய்க்கவும். பஞ்சு சிவப்பானால் அது கலப்படம்.
வடிவம்: சீரற்ற வடிவம் கொண்ட பழங்கள் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்டிருக்கலாம்.
தட்டிப் பார்த்தல்: பழத்தைத் தட்டும்போது 'வெற்றுச் சத்தம்' (Hollow sound) கேட்டால் அது நன்றாகப் பழுத்த பழம்.
சுவை: ஒரு துண்டை ருசிக்கவும். கசப்பு அல்லது ரசாயன வாசனை இருந்தால் உடனே தவிர்த்துவிடுங்கள்.