உலகம் trending
கழிவறையில் சீறிப் பாய்ந்த ராஜநாகம்
காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்
நான்கு மீட்டர் நீளம்...
நெளிந்து வளைந்து....
பார்ப்போரை நிலைகுலையச் செய்யும் சீற்றம்...
இந்தோனேசியாவின் பான்டென் (Banten) மாநிலத்தில் நடந்த சம்பவம் X தளத்தில் பகிரப்பட்டது.
அலுவலகக் கழிவறையில் பதுங்கியிருந்த நச்சுப் பாம்பைக் பாதுகாப்பாக வெளியேற்ற முயல்கிறார் மீட்புப் பணியாளர்.
தர தரவென அதை இழுக்கிறார்.
தரையிலிருந்து சட்டென்று ஆளுயரத்திற்குத் தன் உடலை உயர்த்துகிறது பாம்பு.
மீண்டும் கழிவறையை நோக்கிச் செல்ல முயன்ற பாம்பை வெளியே இழுக்கிறார்.
அது சீறிப் பாய்வதுபோல தெரிகிறது.
அதைத் எச்சரிக்கையுடன் கையாள்கிறார் அவர்
20 நிமிடப் போராட்டத்திற்குப் பிறகு அது பாதுகாப்பாக மீட்கப்பட்டது.
யாருக்கும் பாதிப்பில்லை.
அலுவலகம் இருக்கும் இடத்தில் நிறைய அரிசித் திடல்களும் வெற்று இடங்களும் இருப்பதால் பாம்புகள் நிறைய வருவதாக ஓர் இணையவாசி விளக்கினார்.