Skip to main content
"என்னுடைய ஐஸ்கிரீமைச் சாப்பிட்டது குற்றம்தான்!"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

"என்னுடைய ஐஸ்கிரீமைச் சாப்பிட்டது குற்றம்தான்!" - அம்மாவைப் பற்றிக் காவல்துறையிடம் புகார் செய்த மகன்

வாசிப்புநேரம் -
"என்னுடைய ஐஸ்கிரீமைச் சாப்பிட்டது குற்றம்தான்!" - அம்மாவைப் பற்றிக் காவல்துறையிடம் புகார் செய்த மகன்

படம்: Village Of Mount Pleasant Police Department/Facebook

"என்னுடைய தாயார் மோசமாக நடந்துகொள்கிறார். வந்து என்னுடைய அம்மாவைப் பிடியுங்கள்" என்று 4 வயதுச் சிறுவன் காவல்துறைக்கு அழைத்துச் சொன்னான்.

சிறுவனின் ஐஸ்கிரீமை எடுத்துச் சாப்பிட்டதுதான் அந்தப் பிரச்சினைக்குக் காரணம்.

அமெரிக்காவின் விஸ்கோன்சின் (Wisconsin) மாநிலத்தில் அந்தச் சம்பவம் நடந்தது.

சிறுவன் தொலைபேசியில் பேசியபோது தாயார் அவனிடமிருந்து தொலைபேசியை வாங்கி காவல்துறை அதிகாரியிடம் பேசினார்.

தாம் மகனின் ஐஸ்கிரீமைச் சாப்பிட்டதால் அதிருப்தியில் தம்முடைய மகன் காவல்துறையை அழைத்ததாக அவர் சொன்னார்.

ஆனால் சிறுவனின் பாதுகாப்பை உறுதிசெய்ய அதிகாரிகள் வீட்டிற்குச் சென்றனர்.

சிறுவன் அதிகாரிகளிடம் நேரடியாகத் தம்முடைய தாயாரைப் பற்றி புகார் செய்தான்.

கொஞ்ச நேரத்திற்குப் பிறகு தம்முடைய அம்மாவைக் கைதுசெய்ய வேண்டாம் என்றும் தமக்கு ஐஸ்கிரீம்தான் வேண்டும் என்றும் அந்தச் சிறுவன் அதிகாரிகளிடம் கூறியிருக்கிறான்.

2 நாள்களுக்குப் பிறகு அதிகாரிகள் அந்தச் சிறுவனுக்கு ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்தனர்.
ஆதாரம் : CNN

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்