Skip to main content
தென் பிலிப்பீன்ஸில் நிலநடுக்கம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

தென் பிலிப்பீன்ஸில் நிலநடுக்கம்

வாசிப்புநேரம் -
தென் பிலிப்பீன்ஸை 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உலுக்கியிருக்கிறது.

உயிருடற்சேதம் குறித்து உடனடித் தகவல் ஏதும் இல்லை என்று அமெரிக்கப் புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்தது.

மிண்டனாவோ (Mindanao) தீவின் கடற்கரையில் ஏற்பட்ட நிலநடுக்கம் 30 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்ததாக நிலையம் சொன்னது.

நிலநடுக்கத்தால் மோசமான பாதிப்புகள் ஏதும் இல்லை என்று உள்ளூர் அதிகாரிகள் AFP செய்தியிடம் தெரிவித்துள்ளனர்.

"அது மிகவும் வலுவாக இருந்தது. ஆனால் நீண்ட நேரத்துக்கு நீடிக்கவில்லை. சேதங்களும் ஏற்படவில்லை" என்று தீயணைப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

பசிபிக் "நெருப்பு வளையம்" (Ring of Fire) என்ற பகுதியில் பிலிப்பீன்ஸ் அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.

அவற்றில் பெரும்பாலானவை மனிதர்கள் உணர முடியாத அளவிற்குப் பலவீனமானவை என்று கூறப்படுகிறது.
ஆதாரம் : AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்