6 அடி நீளம்...120 கிலோ எடைகொண்ட முதலை பிடிபட்டது!

Social Media
மலேசியாவின் மேற்குக் கரையிலுள்ள கிள்ளான் துறைமுகத்தில் (Port Klang) 6 அடி நீளமுள்ள முதலை ஒன்று பிடிபட்டது.
அதன் எடை 120 கிலோகிராம்.
அங்குள்ள மீனவர்கள் நேற்று (5 ஜனவரி) இறால்களைப் பிடிக்கச் சென்றிருந்தபோது எதிர்பாராவிதமாக முதலை வலையில் சிக்கியதாக மலேசிய ஊடகங்கள் தெரிவித்தன.
"நல்ல வேளை வலையில் சிக்கிய முதலையால் நகர இயலவில்லை. எவரையும் தாக்காமல் இருக்க மீனவர்கள் முதலையைக் கயிற்றால் கட்டி
வைத்திருந்தனர்," என்று பேச்சாளர் ஒருவர் சொன்னார்.
பிடிபட்ட முதலை வனவிலங்குப் பராமரிப்புத் துறையிடம் ஒப்படைக்கப்படும் என்று கூறப்பட்டது.
முதலைகளைக் கடல் வெளியில் பார்ப்பது அரிது என்று பேச்சாளர் தெரிவித்தார்.
மக்கள் பதற்றமடையவேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.