Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

இஸ்ரேலில் துப்பாக்கிச் சூடு, கத்திக் குத்துத் தாக்குதல் - 6 பேர் மரணம்

வாசிப்புநேரம் -
இஸ்ரேலில் துப்பாக்கிச் சூடு, கத்திக் குத்துத் தாக்குதல் -  6 பேர் மரணம்

(கோப்புப் படம்: Jeremy Long)

ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்துவதற்கு முன்பு இஸ்ரேலில் துப்பாக்கிச் சூடும் கத்திக் குத்துத் தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளன.

அதில் குறைந்தது 6 பேர் மாண்டனர். மேலும் 10 பேர் காயமுற்றனர்.

தாக்குதல் நடத்தியவர்கள் தடுக்கப்பட்டுவிட்டதாகவும், நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் இஸ்ரேலியக் காவல்துறை கூறியது.

கடற்கரை நகரான ஜாஃபாவில் (Jaffa) ரயில் நிலையத்தில் இறங்கிய இரண்டு பேர் துப்பாக்கிச் சூடும் கத்திக்குத்துத் தாக்குதலும் நடத்துவதை இஸ்ரேலியத் தொலைக்காட்சி காட்டியது.

ரயில் நடைமேடையில் இருந்த பயணிகளைத் தாக்கிய அந்த இருவரையும், பொது மக்களும் அதிகாரிகளும் சுட்டுக்கொன்றனர்.

அந்தச் சம்பவத்துக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை. அது பயங்கரவாதச் செயல் என்று அதிகாரிகள் கூறினர்.

தாக்குதல் நடத்திய இருவரும் மேற்குக் கரையின் ஹெப்ரோன் (Hebron) நகரைச் சேர்ந்தவர்கள் என்று தகவல்கள் கூறுகின்றன.
 
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்