உலகம் trending
மலேசியப் பொழுதுபோக்கு நிலையத்தில் நாசவேலை
Facebook/Muhammad Ahyad
This audio is generated by an AI tool.
மலேசியாவின் சேராஸ் (Cheras) வட்டாரத்தில் பொழுதுபோக்கு நிலையத்தில் கலவரம் செய்த சந்தேக நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
நேற்று மதியம் நடந்த அச்சம்பவம் குறித்து இரவு 7.30 மணிக்கு புகார் அளிக்கப்பட்டதாக கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் கூறினார்.
சந்தேக நபர்கள் லாரியுடன் நிலையத்திற்குள் வலுக்கட்டாயமாகப் புகுந்து நாசவேலை செய்ததாக நம்பப்படுகிறது. நிலையத்தின் பெரும்பகுதி சேதமடைந்தது.
கண்காணிப்புக் கேமராவில் பதிவான காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில் 60க்கும் மேற்பட்ட முகமூடிக்காரர்கள் நிலையத்திற்குள் நுழைவதைப் பார்க்க முடிகிறது.
அங்கிருந்து அவர்கள் உடனடியாக வாகனங்களில் வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.
சம்பவம் நடந்ததற்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. காவல்துறையின் விசாரணை தொடர்கிறது.