Skip to main content
மக்களைப் பெற்ற மகராசி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

மக்களைப் பெற்ற மகராசி - 66 வயதில் 10ஆவது குழந்தை

வாசிப்புநேரம் -
மக்களைப் பெற்ற மகராசி - 66 வயதில் 10ஆவது குழந்தை

(படம்: envato.com)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஜெர்மனியைச் சேர்ந்த அலெக்சாண்ட்ரா ஹில்ட்பிரண்ட் (Alexandra Hildebrandt) 10ஆவது குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.

அவருக்கு வயது 66!

சென்ற மாதம் (மார்ச் 2025) 19ஆம் தேதி ஹில்ட்பிரண்ட்டுக்குப் பிலிப் (Philipp) எனும் ஆண் குழந்தை சிசேரியன் (caesarean) வழி பிறந்ததாக Hindustan Times நாளேடு குறிப்பிட்டது.

குழந்தையின் எடை சுமார் 3 கிலோகிராம்.

ஹில்ட்பிரண்ட் 1977ஆம் ஆண்டில் தமது முதல் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

கடந்த 50 ஆண்டுகளில் அவர் மொத்தம் 10 பிள்ளைகளுக்குத் தாயார் ஆனார்.

அவரது மூத்த மகளுக்கும் ஆக இளம் பிள்ளைக்கும் இடையில் வயது வித்தியாசம் 45 ஆண்டுகள்.

"நான் ஆரோக்கியமாகச் சாப்பிடுகிறேன். ஒரு மணிநேரத்திற்கு நீந்துவேன். இரண்டு மணிநேரத்திற்கு ஓடுவேன். புகைபிடிப்பதில்லை. மது அருந்துவதில்லை. இதுவரை கருத்தடை முறைகள் எதையும் பயன்படுத்தியதில்லை," என்றார் ஹில்ட்பிரண்ட்.

குடும்பத்தின் புதுவரவை மகிழ்ச்சியோடு வரவேற்கும் அவர் தமக்கு 35 வயதுபோல் தோன்றுவதாகக் கூறினார்.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்