கொலம்பியாவில் வன்முறை - ஒரே நாளில் 7 வெடிகுண்டுத் தாக்குதல்கள்
வாசிப்புநேரம் -

படம்: AP/Santiago Saldarriaga
கொலம்பியாவில் தொடர் வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
கார்களிலும் மோட்டார்சைக்கில்களிலும் குண்டுகள் வைக்கப்பட்டன. மேலும் துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டது.
தாக்குதல்களில் 7 பேர் மாண்டனர். அவர்களில் இருவர் காவல்துறை அதிகாரிகள்.
தாக்குதல்கள் பெரும்பாலும் கொலம்பியாவின் மூன்றாவது பெரிய நகரான காலியில் (Cali) நடந்தன.
தற்போது கொலம்பியாவில் அதிபர் தேர்தல் பிரசாரங்கள் நடைபெறுகின்றன. சில நாளுக்கு முன் அதிபர் தேர்தல் வேட்பாளரைக் கொல்ல நடந்த முயற்சிக்குப் பிறகு வன்முறை தொடர்கிறது.
வேட்பாளர் மிகேல் உரிப் (Miguel Uribe) தலைநகர் பொகோட்டாவில் (Bogota) கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது தாக்கப்பட்டார்.
அந்தத் தாக்குதலின் தொடர்பில் 15 வயது இளையர் கைதாகியுள்ளார்.
கொலம்பியாவில் உள்நாட்டுப் பாதுக்காப்புக்கு நெருக்கடி ஏற்பட்டிருப்பதாகக் காவல்துறை சொல்கிறது.
தாக்குதல்களைத் தலைமறைவுப் புரட்சிக் குழு நடத்தியிருக்கலாம் என்று தற்காப்பு அமைச்சு சொல்கிறது.

ஆதாரம் : AFP/BBC