உலகம் trending
புதிய Nike காலணிகளால் சர்ச்சை - வழக்கு தொடுத்த 7-Eleven
வாசிப்புநேரம் -
படம்: Nike
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
Nike நிறுவனம் வெளியிடவிருக்கும் புதிய காலணிகளுக்கு எதிராக 7-Eleven நிறுவனம் வழக்கு தொடுத்துள்ளது.
ஆரஞ்சு, சிவப்பு, பச்சை ஆகிய மூன்று வண்ணங்கள் காலணியில் இடம்பெறுகின்றன.
அவை தனது வர்த்தகச் சின்னத்தைப் போன்று இருப்பதாக 7-Eleven நிறுவனம் கூறியது.
அதுமட்டுமல்ல. சர்ச்சைக்குரிய காலணி ஜூலை 11ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது.
அன்று 7-Eleven நிறுவனத்தின் 'பிறந்தநாள்' என்று சொல்லப்பட்டது.
விவகாரம் குறித்துப் பேசிய பிறகும் Nike நிறுவனம் காலணியை விளம்பரப்படுத்தி அதை விற்கத் தயாராகிறது என்று 7-Eleven நிறுவனம் சாடியது.
அதனால் அமெரிக்காவின் டெக்சஸ் (Texas) மாநிலத்தில் வழக்கு தொடரப்பட்டது.
Nike நிறுவனத்துக்கும் 7-Eleven நிறுவனத்துக்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லை.
இந்நிலையில் புதிய காலணி வெளியானால் அது வாடிக்கையாளர்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்றது 7-Eleven.
7-Eleven நிறுவனத்தின் அடையாளத்தை Nike சாதகமாகப் பயன்படுத்துவதாகவும் சொல்லப்பட்டது.
Nike நிறுவனம் காலணியை விற்கக்கூடாது; இழப்பீடு வழங்கவேண்டும் என்று 7-Eleven நிறுவனம் கோரியுள்ளது.

ஆதாரம் : Reuters