Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஜப்பானியப் பல்கலைக்கழகத்தில் தாக்குதல்: 8 மாணவர்கள் குணமடைந்து வருகின்றனர்

வாசிப்புநேரம் -
ஜப்பானியப் பல்கலைக்கழகத்தில்  தாக்குதல்: 8 மாணவர்கள் குணமடைந்து வருகின்றனர்

(படம்: Philip FONG / AFP)

தோக்கியோவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் நடத்தப்பட்ட தாக்குதலில் காயமுற்ற 8 மாணவர்கள் குணமடைந்துவருகின்றனர்.

யாருக்கும் மருத்துவமனைக்குச் செல்லவேண்டிய நிலை ஏற்படவில்லை என்று பல்கலைக்கழகம் சொன்னது.

சுத்தியலைக் கொண்டு தாக்கியதாகச் சந்தேகிக்கப்படும் 22 வயது தென் கொரிய மாணவி கைது செய்யப்பட்டுள்ளார்.

பள்ளியில் கொடுமைக்கு ஆளானதால் அவர் அச்செயலில் இறங்கியிருக்கக்கூடும் என்று நம்பப்படுவதாக NHK ஒளிபரப்பு நிறுவனம் தெரிவித்தது.

சம்பவத்துக்குப் பிறகு பலரது தலையிலிருந்து ரத்தம் கசிந்ததாகத் தகவல்கள் குறிப்பிட்டன.

சந்தேகத்துக்குரிய பெண் திடீரென வகுப்பறையில் சுத்தியலை ஓங்கியதாகச் சம்பவத்தை நேரில் கண்ட மாணவர் ஒருவர் கூறினார்.
 
ஆதாரம் : AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்