உலகம் trending
80 வயது ஓட்டுநர்...கார் பறந்தது
வாசிப்புநேரம் -
அமெரிக்காவின் நியூ யார்க் மாநிலத்தில் திகைக்கவைக்கும் விபத்து.
வைட் பிளேன்ஸ் (White Planes) நகரில் 80 வயது ஆடவர் காரை ஓட்டிக்கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்தார்.
கார் வேகமாகச் சென்றுகொண்டிருந்ததால் திடீரென்று பறந்தது.
அருகிலிருந்த கட்டடத்தைச் சுற்றியிருந்த சாரக்கட்டின் மீது மோதியது.
நல்லவேளையாக மற்ற வாகனங்கள் மீதும் பாதசாரிகள் மீதும் மோதவில்லை.
ஓட்டுநர் 80 வயது ஆடவர் என்று அமெரிக்காவின் ABC ஊடகம் தெரிவித்தது.
சம்பவம் கண்காணிப்புக் கேமராவில் பதிவானது.
அந்தக் காணொளி சமூக ஊடகங்களில் பரவுகிறது.
வாகனம் ஓட்ட வயது வரம்பு விதிப்பதைப் பற்றி பெரும்பாலான இணையவாசிகள் கேள்வி எழுப்பினர்.
"மூத்தோர் கார்களை ஓட்டுவதால் சாலைகளில் அபாயம் அதிகரிக்கிறது. மற்றவர்களையும் அவர்களையும் விபத்துகளிலிருந்து பாதுகாக்க அவர்களுக்குத் தடை விதிக்கவேண்டும்," என்று பலர் குறிப்பிட்டனர்.

தொடர்புடையவை:
ஆதாரம் : Others