கதவில் ஏறிக் குதித்து வீட்டிலிருந்து வெளியே சென்ற 82 வயது மூதாட்டி
This audio is generated by an AI tool.
சீனாவில் 82 வயது மூதாட்டி வீட்டின் கதவின்மேல் ஏறிக்குதித்து வெளியே சென்ற காட்சி இணையவாசிகளை ஈர்த்துள்ளது.
வீட்டில் யாரும் இல்லாத வேளையில் அவர் 3 மீட்டர் கதவில் மெல்ல ஏறுவது கண்காணிப்புக் கேமராவில் பதிவானது.
அந்தக் காட்சி மூதாட்டியின் குடும்பத்தினரைப் பதைபதைக்க வைத்தது.
அவர் அதற்கு முன்பு நான்கு முறை அவ்வாறு செய்ததாகத் தெரியவந்தது.
எனினும் ஒவ்வொரு முறையும் அவர் காயமின்றி வீடு திரும்பியதாகக் குடும்பத்தினர் கூறினர்.
கதவு துருப்பிடித்து இருந்ததால் மூதாட்டி அதைத் திறக்கச் சிரமப்பட்டதாகச் சொல்லப்பட்டது.
சம்பவத்தையடுத்து கதவு பழுதுபார்க்கப்பட்டது.
கதவை எவ்வாறு திறப்பது என்று குடும்பத்தினர் மூதாட்டிக்குக் கற்றுக்கொடுத்தனர்.
அந்தச் சம்பவம் குறித்து இணையவாசிகள் பரவலாகக் கருத்து தெரிவிக்கின்றனர்.
சிலர் மூதாட்டி ஆரோக்கியமாக இருப்பதாய்க் கூறி அவரைப் பாராட்டினர்.
முதியோரின் பாதுகாப்பை உறுதிசெய்யக் குடும்பத்தினர் அவர்களை முறையாகக் கண்காணிக்கவேண்டும் என்று மற்றவர்கள் கருத்துரைத்தனர்.