Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

"கிருமித்தொற்றுக்கு எதிராக ஓரளவு எதிர்ப்பாற்றல் உள்ளவர்கள் உலகில் 90%"

வாசிப்புநேரம் -
உலக மக்களில் 90 விழுக்காட்டினருக்குக் கிருமித்தொற்றுக்கு எதிராக ஓரளவு எதிர்ப்பாற்றல் இருப்பதாக உலகச் சுகாதார நிறுவனம் கணித்துள்ளது.

கிருமித்தொற்றால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டது அல்லது தடுப்பூசி போட்டுக்கொண்டது அதற்கு முக்கிய காரணம் என்று குறிப்பிடப்பட்டது.

நோய்த்தொற்றின் நெருக்கடிக் காலத்தைக் கிட்டத்தட்ட கடந்துவிட்டதாக நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் கெப்ரியேசஸ் (Tedros Adhanom Ghebreyesus) கூறினார்.

இருப்பினும், புதிய கிருமி வகைகள் உருவெடுத்துக்கொண்டே இருப்பதாய் அவர் எச்சரித்தார்.

"சோதனை நடவடிக்கைகளிலும் தடுப்பூசித் திட்டத்திலும் உள்ள இடைவெளிகள் புதிய கிருமி ரகங்கள் உருவெடுப்பதற்குத் தகுந்த சூழலை ஏற்படுத்துகின்றன," என்று டாக்டர் டெட்ரோஸ் சொன்னார்.

தற்போது உலகில் 500க்கும் அதிகமான ஓமக்ரான் துணை ரகக் கிருமிகள் பரவிக் கொண்டிருப்பதாய் அவர் சொன்னார்.

கிருமித்தொற்றால் மொத்தம் 6.6 மில்லியன் மரணங்கள் பதிவாகியுள்ளதாககவும் அவர் கூறினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்