Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

தூரம் என்ன தூரம்? நான் என் தங்கையைப் பார்க்கப் போகிறேன்

வாசிப்புநேரம் -
தூரம் என்ன தூரம்? நான் என் தங்கையைப் பார்க்கப் போகிறேன்

(படம்: TikTok/ @stephanieatkinson)

அமெரிக்காவின் நியூ ஹெம்ப்ஷாயர் (New Hampshire) மாநிலத்திலிருந்து நெவாடா (Nevada) மாநிலத்திற்குத் தமது தங்கையைப் பார்க்கச் சென்றிருக்கிறார் 94 வயது பார்பரா கரொலான் (Barbara Carolan).

அவர்கள் இருவரும் சந்தித்தபோது எடுக்கப்பட்ட உருக்கமான காணொளி TikTok தளத்தில் பிரபலமாகிவருகிறது.

"நாம் இருவரும் மறுபடியும் சந்திப்போம். அப்படி இந்தப் பூமியில் சந்திக்கவில்லை என்றால் சொர்க்கத்தில் சந்திப்போம்," என்று தங்கை ஷர்லி (Shirley) அக்காவிடம் கூறியிருக்கிறார்.

உள்ளத்தை உருக்கும் அந்தக் காட்சி காணொளியில் பதிவாகியுள்ளது.

வெகு தொலைவில் உறவினர்கள் வசிக்கும்போது அடுத்து எப்போது சந்திக்கப் போகிறோம் என்ற நிச்சயமற்ற சூழல் சகோதரிகளின் உரையாடலில் தெரிகிறது.

The Guardian செய்தி நிறுவனம் அதைச் சுட்டியது.

கோவிட்-19 நோய்த்தொற்றுச் சூழலால் சகோதரிகள் 2020ஆம் ஆண்டிலிருந்து ஒருவரை ஒருவர் பார்க்கவில்லை.

"நான் என் தங்கையைப் பார்ப்பது இதுவே கடைசியாக இருக்கலாம்" என்று பார்பரா தம்முடைய பேத்தி ஷிவ்லியிடம் கூறியிருக்கிறார்.

அவர்கள் இருவரும் கிட்டத்தட்ட 4,340 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்தனர்.

"நாம் அற்புதமான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறோம்," என்று அக்கா தங்கையிடம் சொன்னார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்