Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சிறைக்குச் சென்றுவந்தவர் கிட்டத்தட்ட 10 மணிநேரம் 'plank' செய்து உலகச் சாதனை படைத்தார்

வாசிப்புநேரம் -
'Plank' - இந்த உடற்பயிற்சியை ஒருசில நிமிடங்களுக்குச் செய்யவே சிலருக்கு மூச்சுமுட்டும்.

ஆனால் செக் குடியரசைச் சேர்ந்த ஜோசப் சாலெக் (Josef Šálek) கிட்டத்தட்ட 10 மணிநேரம் 'plank' செய்து உலகச் சாதனை படைத்துள்ளார்.

ஜோசப், 9 மணி 38 நிமிடம் 47 வினாடிகளைப் பதிவுசெய்து மிக நீண்ட நேரம் 'plank' சவாலைச் செய்தவர் என்று பெயர் பதித்துள்ளார்.

இதற்குமுன்னர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டேனியல் ஸ்கெலி (Daniel Scali) 9 மணிநேரம் 30 நிமிடம் 1 வினாடி என்ற 'plank' சாதனையை வைத்திருந்தார். அதனைத் தற்போது ஜோசப் முறியடித்துள்ளார்.

ஜோசப் ஒரு சிகிச்சையாளர், விரிவுரையாளர் என்பதோடு தனிநபர் மேம்பாட்டுப் பயிற்றுவிப்பாளராகவும் இருக்கின்றார். அவர் கடந்த மே 20 ஆம் தேதி இந்தச் சாதனையைப் புரிந்தார்.

வாழ்க்கையை மாற்றிய சம்பம்

5 ஆண்டுகளுக்கு முன்னர் அதிக உடல் எடையுடன் புகைத்தல், மது அருந்துதல் என்றிருந்த தமது வாழ்க்கையை ஒரு பயணம் மாற்றியதாக ஜோசப் சொன்னார்.

பயணத்தின்போது தவறாக அடையாளம் காணப்பட்ட வழக்கில் ஐக்கிய அரபுச் சிற்றரசின் கடப்பிதழ் கட்டுப்பாட்டுத் துறை தம்மைப் பல மாதங்கள் சிறையில் வைத்ததாக அவர் சொன்னார். சிறையில் இருந்து விடுதலையாகும்வரை தம்மைச் சுறுசுறுப்புடன் வைத்துக்கொண்டதாக ஜோசப் கூறினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்