Skip to main content
அரிய குரங்கு கடத்தல்?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம் trending

அரிய குரங்கு கடத்தல்? - சர்ச்சையை ஏற்படுத்திய நடிகர் விக்ரமின் காணொளி

வாசிப்புநேரம் -
அரிய குரங்கு கடத்தல்? - சர்ச்சையை ஏற்படுத்திய நடிகர் விக்ரமின் காணொளி

காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படங்கள்

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

நடிகர் விக்ரம் அரிய வகைக் குரங்குடன் எடுத்த காணொளி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

அவர் அந்தக் காணொளியை Instagram செயலியில் பதிவேற்றினார்.

எனினும் 24 மணி நேரத்தில் அதை அகற்றினார்.

Lar gibbon எனும் அந்தக் குரங்கு எவ்வாறு நடிகரிடம் வந்தது என்பதை தமிழக வனத்துறை அதிகாரிகள் விசாரித்துவருகின்றனர்.

Lar gibbon வகைக் குரங்கு அழியும் அபாயத்தில் உள்ள உயிரினங்கள் பட்டியலில் உள்ளது. இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் அது பாதுகாக்கப்பட்ட உயிரினம் ஆகும்.

நடிகர் விக்ரம் அந்தக் குரங்கைத் தம் சம்பந்தி தொழிலதிபர் CK ரங்கநாதனிடமிருந்து பெற்றதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.

திரு ரங்கநாதன் மணிப்பூர் மாநிலத்தில் குரங்கை வாங்கியதாகக் கூறப்படுகிறது.

ஆனால் வனவிலங்கு ஆர்வலர்கள், குரங்கு தென்கிழக்காசியாவிலிருந்து கடத்தப்பட்டிருக்கலாம் என்று குற்றஞ்சாட்டுகின்றனர்.

அந்தக் குரங்கை வீட்டில் செல்லப்பிராணியாக வைத்திருக்க திரு ரங்கநாதனுக்கு உரிமம் உள்ளதா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

விசாரணை நடக்கிறது.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்