அதானி குடும்பம் ரகசியமாகச் சொந்த பங்குகளில் முதலீடு செய்தது - ஆவணத் தகவல்கள்
வாசிப்புநேரம் -
இந்தியாவின் மிகப் பெரிய செல்வந்தர்களான அதானி குடும்பத்தார் ரகசியமாகத் தங்கள் சொந்தப் பங்குகளை வாங்கியதாகப் புதிதாக வெளியான ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.
அதன் வழி அவர்கள் இந்தியப் பங்குச் சந்தையில் பல நூறு மில்லியன் டாலர் முதலீடு செய்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
அதானி குழும நிறுவனங்களின் பங்கு விலைகளை ஆதரிக்க மொரிஷியஸில் (Mauritius) உள்ள வெளிவணிக (offshore) நிறுவனம் ஒன்று பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
வெளிவணிக நடவடிக்கை 2013ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை இடம்பெற்றதாக நம்பப்படுகிறது.
அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானிக்குத் தொடர்புடையவர்கள் அந்த வெளிவணிக நிறுவனத்தை நடத்துவதுபோல் தெரிவதாக The Guardian செய்தி நிறுவனம் சொன்னது.
இதில் திரு. அதானியின் மூத்த சகோதரரான திரு. வினோத் அதானிக்கும் தொடர்பிருப்பதாக ஆவணங்கள் காட்டுகின்றன.
Organised Crime and Corruption Reporting Project (OCCRP) என்ற அமைப்பு அந்தத் தகவல்களை வெளியிட்டது.
எனினும் குழுமத்தின் அன்றாடச் செயல்முறைகளில் திரு. வினோத் அதானிக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று அதானி குழுமம் கூறுகிறது.
இந்தக் குற்றச்சாட்டுகளில் எந்த உண்மையும் இல்லை என்றும் அது சொன்னது.