"காஸாவில் முன்னில்லாத வகையில் சண்டை நிறுத்தச் சாத்தியம் நெருங்கியுள்ளது"
வாசிப்புநேரம் -
படம்: AP
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
காஸாவில் சண்டைநிறுத்தம் பிறக்கும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ (Marco Rubio) நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
முன்னெப்போதையும்விடச் சண்டைநிறுத்தம் ஏற்படும் சாத்தியம் இப்போது நெருங்கி வந்திருப்பதாக அவர் சொன்னார்.
60 நாள்களுக்குச் சண்டையைத் தற்காலிகமாக நிறுத்துவது குறித்து இஸ்ரேலும் ஹமாஸும் பேசி வருகின்றன.
முதலில் 10 பிணையாளிகளை விடுவிக்க ஹமாஸ் முன்வந்திருக்கிறது.
ஆனால் காஸாவில் பெரிய அளவில் இஸ்ரேலிய ராணுவம் தொடர்வதை அது எதிர்க்கிறது.
நிரந்தர அமைதிக்கு ஹமாஸ் கோரிக்கை விடுக்கிறது.
அறுபது நாள் சண்டைநிறுத்தத்தின்போது நிரந்தர அமைதி குறித்துப் பேசத் தயார் என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு (Benjamin Netanyahu) சொல்கிறார்.
ஆனால் ஹமாஸ் ஆயுதங்களைக் கைவிட வேண்டும், காஸா ஆயுதமற்ற பகுதியாக இருக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார்.
இருதரப்பும் கத்தாரில் நேரடிப் பேச்சில் ஈடுபட்டுள்ளன.

ஆதாரம் : Others