நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் காலரா நோய் பரவும் ஆபத்து உள்ளது: ஐக்கிய நாட்டு நிறுவனம்

(படம்: AFP)
உள்ளங்களோடு சிதைந்த வீடுகள்...
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அங்கு காலரா நோய் பரவலாம் என்று ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் மனிதாபிமானப் பிரிவு எச்சரித்திருக்கிறது.
அங்குக் காலரா நோய் பரவுவதைத் தடுப்பதற்கான ஆயத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு இன்னும் கூடுதலான மீட்புப் படையினர் சென்று சேர்ந்துள்ளனர்.
அங்குப் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
நிலநடுக்கத்தில் சரிந்துவிழுந்த கட்டடங்களில் சிக்கியிருப்போரைக் காப்பாற்ற அதிகாரிகள் முற்படுகின்றனர்.
உயிர் பிழைத்தவர்களுக்கு உணவும் தங்குமிடமும் வழங்கப்படுகின்றன.
6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானின் பாக்திக்கா வட்டாரத்தில் மையம் கொண்டிருந்தது.
அந்த இடத்திற்குச் சென்றிருந்த தற்காப்பு அமைச்சு அதிகாரிகள் மக்களுக்கு உதவி வழங்கினர்.
மாண்டோர் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியது.
அந்த எண்ணிக்கை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.