Skip to main content
ஆப்கான் மருத்துவமனை மீது பாகிஸ்தான் தாக்குதல்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஆப்கான் மருத்துவமனை மீது பாகிஸ்தான் தாக்குதல் - 400 பேர் பலி

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள மருத்துவமனைமீது பாகிஸ்தான் ஆகாயத் தாக்குதல் நடத்தியதாக தலிபான் அரசாங்கம் கூறியிருக்கிறது.

அதில் 400 பேர் மாண்டனர். மேலும் 250 பேர் காயமடைந்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதல் நடந்தபோது மருத்துவமனையில் சுமார் 2,000 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.

பாகிஸ்தான் நேற்று இரவு தாக்குதலை நடத்தியதாக தலிபான் அரசின் பேச்சாளர் தெரிவித்தார்.

பாகிஸ்தான் மருத்துவமனையைத் தாக்கவில்லை என்று கூறுகிறது.

ராணுவத் தளங்களையும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவான கட்டடங்களையுமே குறிவைத்ததாக அது சொல்கிறது.

எனினும் மருத்துவமனைக்கு அருகில் எந்த ராணுவத் தளமும் இல்லை என்று தலிபான் சுகாதார அமைச்சு பிபிசி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தது.

கடந்த சில வாரங்களாக ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடுமையான மோதல் நிலவுகிறது.

இரண்டு நாடுகளும் ஒன்றை ஒன்று தாக்கி வருகின்றன.

ஆதாரம் : AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்