Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஆப்கானிஸ்தானுக்கு நிவாரண உதவி அளிக்கப்படுவதற்கு எதிராகத் தலிபான் நடவடிக்கை

வாசிப்புநேரம் -
ஆப்கானிஸ்தானுக்கு நிவாரண உதவி அளிக்கப்படுவதற்கு எதிராகத் தலிபான் நடவடிக்கை

(படம்: AFP)

ஆப்கானிஸ்தானை ஆளும் தலிபான் தரப்பினர் நாட்டு மக்களுக்காக ஐக்கிய நாட்டு நிறுவனம் வழங்க முனையும் நிவாரண உதவிகளில் தலையிடுவதாகக் கூறப்படுகிறது.  

சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தலிபான்கள் நாட்டைக் கைப்பற்றினர். அப்போதிலிருந்தே ஐக்கிய நாட்டு நிறுவனம், நிவாரண உதவிக் குழுக்கள் போன்றவை ஆப்கானிஸ்தானுக்குப் போதிய பணத்தை விநியோகம் செய்யச் சிரமப்படுவதாகக் கூறப்படுகிறது. 

வங்கி தொடர்பான வழக்கமான கட்டமைப்பின் மூலம் ஆப்கானிஸ்தானுக்குப் பண உதவி வழங்குவது சிரமமாக உள்ளது  என்று நிறுவனம் தெரிவித்தது. 

அதன் மூலம் பெரிய தொகைகளை அனுப்ப முடியாததால் விநியோகத் தொடர்களில் முறிவு ஏற்படுவதாகக் கூறப்பட்டது. 

அதனால் ஆப்கானிஸ்தானுக்கு மில்லியன் கணக்கான டாலர் மதிப்பிலான நிவாரணப் பணத்தை அனுப்புவதற்கு Humanitarian Exchange Facility எனும் புதிய கட்டமைப்பை நிறுவ ஐக்கிய நாட்டு  நிறுவனம் முயல்கிறது. அதன் மூலம் தலிபான் தலைவர்களை மீறி ஆப்கானிஸ்தானுக்குப் பண உதவி வழங்கமுடியும் என்று நம்பப்படுகிறது. 

இருப்பினும் தலிபான் தரப்பினர் அதை எதிர்த்துச் செயல்படுவதால் அத்தகைய முயற்சிகளில் குறைவான முன்னேற்றத்தையே காணமுடிவதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் குறைகூறியுள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa