ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்
வாசிப்புநேரம் -
(படம்: Wakil Kohsar / AFP)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
ஆப்கானிஸ்தானின் தென்கிழக்கு வட்டாரத்தை மீண்டும் நிலநடுக்கம் உலுக்கியிருக்கிறது.
அதன் அளவு 5.5 ரிடக்டர்.
ஞாயிற்றுக்கிழமை (31 ஆகஸ்ட்) நிலநடுக்கம் மையம் கொண்டிருந்த இடத்தை மீண்டும் உலுக்கியது அதிர்வு.
வார இறுதியில் நேர்ந்த நிலநடுக்கத்தில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம். அதற்குள் அங்கு மீண்டும் நிலநடுக்கம்.
நிலச்சரிவுகளால் பல இடங்களில் சாலைப் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. மீட்புக் குழுவினர் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் செல்வதில் சிரமம் நீடிக்கிறது.
பல இடங்களில் உள்ள பாதிக்கப்பட்டோருக்கு இன்னும் தற்காலிகக் கூடாரங்களே கிடைக்கவில்லை.
தற்போது போதுமான அளவு மனிதாபிமான உதவி நிதி இல்லை என்பதைச் சுட்டும் ஐக்கிய நாட்டு நிறுவனம், உலக நாடுகள் உடனே உதவ வேண்டும் என்று வலியுறுத்தியது.

ஆதாரம் : AFP