Skip to main content
குடியேறிகளோடு வந்த பேருந்து எரிவாயு லாரி மீது மோதியது
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

குடியேறிகளோடு வந்த பேருந்து எரிவாயு லாரி மீது மோதியது - 76 பேர் மரணம்

வாசிப்புநேரம் -
குடியேறிகளோடு வந்த பேருந்து எரிவாயு லாரி மீது மோதியது - 76 பேர் மரணம்

(படம்: X/Ahmadullah Muttaqi)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஆப்கானிஸ்தானில் நேர்ந்த பேருந்து விபத்தில் மாண்டோரின் எண்ணிக்கை 76க்கு உயர்ந்துள்ளது.

மூவர் கடுமையாகக் காயமுற்றனர்.

நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள ஹேராட் நகரில் மோட்டார் சைக்கிள் மீதும் எரிவாயு ஏற்றிச் சென்றுகொண்டிருந்த லாரி மீதும் பேருந்து மோதியது.

விபத்து ஏற்பட்டதும் தீ மூண்டது.

பேருந்தில் ஈரானிலிருந்து நாடு திரும்பிக்கொண்டிருந்த ஆப்கானியக் குடியேறிகள் இருந்தனர்.

அவர்கள் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலுக்குச் சென்றுகொண்டிருந்தனர்.

இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து ஈரான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளிருந்து சுமார் 1.5 மில்லியன் ஆப்கானியர் நாடு திரும்பியுள்ளனர்.

பல ஆண்டுகள் கழித்து ஈரானும் பாகிஸ்தானும் அவர்களைச் சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்ப முடிவெடுத்திருக்கின்றன.
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்