Skip to main content
ஆப்கானிஸ்தான் சீன உணவகத்தில் தற்கொலைத் தாக்குதல்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஆப்கானிஸ்தான் சீன உணவகத்தில் தற்கொலைத் தாக்குதல்

வாசிப்புநேரம் -
ஆப்கானிஸ்தான் சீன உணவகத்தில் தற்கொலைத் தாக்குதல்
படம்: AFP
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள சீன உணவகத்தில் ஏற்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

அது தற்கொலைத் தாக்குதல் என்று குழு தெரிவித்தது.

சீனாவில் வீகர்களுக்கு (Uyghurs) எதிராக நடக்கும் இனப்படுகொலைக்குப் பதிலடியாகச் சீன குடிமக்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புச் சொன்னது.

தாக்குதலில் மாண்டவர்களில் ஒருவர் சீனர். மற்ற அனைவரும் ஆப்கான் மக்கள். ஒரு குழந்தை உட்பட பலர் தாக்குதலில் காயமுற்றனர்.

அது சீன முஸ்லிம்களிடையே பிரபலமாக விளங்கிய உணவகம்.

அந்த உணவகத்தை நடத்தியவர் சீன முஸ்லிமான திரு அப்துல் மஜித்.

ஷார்-இ-நாவ் (Shahr-e-Naw) பகுதியில் அந்த உணவகம் அமைந்திருந்தது.

ஆதாரம் : AP

மேலும் செய்திகள் கட்டுரைகள்