Skip to main content
ஆப்கானிஸ்தானில் இணையச் சேவை துண்டிப்பு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஆப்கானிஸ்தானில் இணையச் சேவை துண்டிப்பு

வாசிப்புநேரம் -
ஆப்கானிஸ்தானில் இணையச் சேவை துண்டிப்பு

(படம்: REUTERS/Sayed Hassib)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஆப்கானிஸ்தானில் இணையம், தொலைபேசிச் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

அது குறித்து தலிபான் நிர்வாகம் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

இணையத்தில் ஆபாசப் படங்கள் குறித்து அது ஏற்கனவே அக்கறை எழுப்பியிருந்தது.

அண்மை வாரங்களில் ஆப்கானிஸ்தானின் சில மாநிலங்களில் கண்ணாடியிழை விரிவலைச் சேவை துண்டிக்கப்பட்டது.

தற்போது அங்கு இணையத் தொடர்பு ஒரு விழுக்காட்டில் இருப்பதாக அனைத்துலக இணையக் கண்காணிப்பு அமைப்பு NetBlocks கூறியது.

நேற்று (29 செப்டம்பர்) இணையத் தொடர்பு கட்டங்கட்டமாகத் துண்டிக்கப்பட்டதாக அது சொன்னது.

தொலைபேசிகளுக்கான 3G, 4G இணையச் சேவை ஒரு வாரத்தில் முடக்கப்படும் என்று அதிகாரிகள் சொன்னதாக உள்ளூர் ஊடகமான Tolo News எச்சரித்தது.

2G சேவை மட்டுமே வழங்கப்படும் என்று அது தெரிவித்தது.

ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

பெண்கள் வேலை செய்யவும் பள்ளிகளுக்குப் படிக்கச் செல்லவும் அது தடை விதித்திருக்கிறது.
ஆதாரம் : Reuters

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்