Skip to main content
ஆசிரியருக்குப் பதில் பாடம் நடத்தும் AI
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஆசிரியருக்குப் பதில் பாடம் நடத்தும் AI

வாசிப்புநேரம் -
ஆசிரியருக்குப் பதில் பாடம் நடத்தும் AI

படம்: Envato Elements

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஆஸ்திரேலியாவின் மெக்குவாரி (Macquarie) பல்கலைக்கழகம் இரண்டு உளவியல் பாடங்களில் ஆசிரியர்கள் நடத்தும் வகுப்புகளுக்குப் பதிலாகச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.

‘Virtual Peer’ என்ற AI தானியக்க உரையாடல் தளம் மாணவர்களிடம் கேள்விகளைக் கேட்டு பல்வேறு சூழல்களின் அடிப்படையில் பயிற்சிகளை நடத்த வழிகாட்டுகிறது.

இதுபோன்ற AI நடவடிக்கைகள் கட்டாயமல்ல என்று கூறும் பல்கலைக்கழகம் அவை கற்றலுக்கு உதவும் கூடுதல் வசதி மட்டுமே என்கிறது.

ஆனால் ஆசிரியர்கள் வகுப்பை நடத்துவதற்குப் பதிலாக AI வகுப்பை நடத்துவது குறித்து மாணவர்கள் சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர்களுடன் நேரடித் தொடர்புக்கு AI மாற்றாக இருக்க முடியாது என்று கல்வித்துறை நிபுணர்களும் எச்சரிக்கின்றனர்.

ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகங்களில் AI பயன்பாடு அதிகரிப்பதால் ஆசிரியர்கள் வேலையை இழந்துவிடுவார்களோ என்ற கவலையும் எழுந்துள்ளது.
ஆதாரம் : Others/The Guardian

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்