தனிப்பட்ட உதவியாளராய் உருவெடுக்கும் AI சாதனங்கள்
This audio is generated by an AI tool.
லாஸ் வேகஸில் மின்னிலக்கச் சாதனங்களின் கண்காட்சி. செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் மக்களை ஈர்க்கின்றன.
சங்கிலிப் பதக்கம், சட்டையில் குத்திவைக்கும் அலங்கார ஊக்கு, மோதிரம் என எளிய கருவிகள் கண்ணைப் பறிக்கின்றன.
அணியும்போது அவை தனிப்பட்ட உதவியாளர் போல் செயல்படும் ஆற்றல் கொண்டவை.
AI செயற்கை நுண்ணறிவு அதற்கு வழியமைக்கிறது.
சென்ற ஆண்டும் கண்காட்சியில் அத்தகைய கருவிகள் இருந்தன. ஆனால் மென்பொருள், மின்கலன், நுண்சில்லு எனப் பல பிரச்சினைகள். எனவே பெரிய வரவேற்பு இல்லை.
குறைகளைக் களைந்து மெருகேற்றப்பட்ட புதிய கருவிகள் மக்களை ஈர்க்கின்றன.
குறிப்பெடுப்பது, நினைவூட்டுவது முதலிய வேலைகளுக்கும் அந்தக் கருவிகளைப் பயன்படுத்தலாம்.
ஆனால், எப்போதும் ஏதோ ஒன்று கண்காணித்துக் கொண்டே இருப்பது போல் தோன்றுவதால் அந்தரங்கம் குறித்துச் சிலர் அச்சப்படுகின்றனர்.
மின்னிலக்கக் கடிகாரம் போன்று செயற்கை நுண்ணறிவுக் கருவிகளும் விரைவில் மக்களிடம் பரவலாகும் என்றே தோன்றுகிறது.