நேப்பாளப் பெருவெள்ளம்: "பாதிக்கப்பட்டவர்களுக்குக் கைகொடுப்பது மிகமிகச் சிரமம்"
Arun SANKAR / AFP
This audio is generated by an AI tool.
நேப்பாள-திபெத் வெள்ளப் பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது கைகொடுப்பது மிகமிகச் சிரமமாய் இருப்பதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் எச்சரித்திருக்கிறது.
பல பாலங்களும் சாலைகளும் சிதைந்துவிட்டன.
உதவிப்பொருள்களை எடுத்துச்செல்ல ஆளில்லா வானூர்திகளையும் சுமைதூக்குபவர்களையும் நாடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
தண்ணீர், உணவு, மருந்து ஆகியவற்றை ஆளில்லா வானூர்திகளில் அனுப்புவதாக நேப்பாள அரசு சொல்கிறது.
சேதமடைந்த இடங்களை அடைவதற்கும் சாலைகளை மீண்டும் திறப்பதற்கும் இந்தியாவும் சீனாவும் தற்காலிகப் பாலங்களை அனுப்புகின்றன.
மேலும் வெளிநாட்டு உதவி தேவை என்று நேப்பாளம் குரல் கொடுக்கிறது.
பேரிடரில் மாண்டோர் எண்ணிக்கை 1,200ஐத் தாண்டியிருக்கிறது.
இன்னமும் சுமார் ஐயாயிரம் பேரைக் காணவில்லை.
காணாமல் போனவர்களில் 800க்கும் அதிகமானோர் வெளிநாட்டினர்.
நேப்பாளத்தில் குடும்பங்கள் அன்புக்குரியவர்கள் பற்றிய செய்திக்காக மருத்துவமனைகளையும் சவக்கிடங்குகளையும் நாடி வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.