"ஏர் இந்தியா விமான விபத்தை மேலும் விசாரிக்கவேண்டும்"
வாசிப்புநேரம் -
(படம்: Punit PARANJPE / AFP)
கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து குறித்துக் கூடுதல் விசாரணை நடத்தவேண்டும் என்று விமானிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்திய விமானிகள் சம்மேளனம் அந்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சிடம் ஒரு கடிதத்தைச் சமர்ப்பித்தது.
விபத்துக்குக் காரணம் விமானி அல்ல; மின்சாரக் கோளாறாக இருக்கக்கூடும் என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டது.
சென்ற ஆண்டு ஜூன் மாதம் அகமதாபாத் நகரில் நேர்ந்த விமான விபத்தில் 260 பேர் மாண்டனர்.
ஒரு மாதத்திற்குப் பிறகு இந்தியாவின் விமான விபத்து விசாரணைப் பிரிவு முதற்கட்ட அறிக்கையை வெளியிட்டது.
விமானத்தின் இயக்கவிசைக்குச் செல்லும் எரிபொருள் துண்டிக்கப்பட்டதாக அறிக்கை தெரிவித்தது.
இறுதி விசாரணை அறிக்கை அடுத்த மாதம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் சம்மேளனம் மேல்விசாரணை கோரியுள்ளது.
விமானி தவறிழைத்ததால் விபத்து ஏற்பட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் தொழில்நுட்பக் கோளாறு ஏற்படவில்லை என்று திட்டவட்டமாகக் கூற முடியாது என்று சம்மேளனம் தெரிவித்தது.

ஆதாரம் : AFP