Skip to main content
ஏர் இந்தியா விபத்து
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஏர் இந்தியா விபத்து - 12/06 அன்று. மாண்ட முன்னாள் முதலமைச்சரின் ராசி எண் 1206

வாசிப்புநேரம் -
கார் உரிம எண்களில் 1206...

தேர்தல் படிவங்களில் 1206...

தனிப்பட்ட ஆவணங்களிலும் 1206...

ஏர் இந்தியா விமான விபத்தில் மாண்ட குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் விஜய் ருபானியின் (Vijay Rupani) ராசி எண் அது என்று நம்பப்படுகிறது.

ராசி எண்களை அதிகம் நம்பிய அவர் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் 1206 என்ற எண்ணைப் பயன்படுத்தியதாக Times of India செய்தி நிறுவனம் சொன்னது.

அது வெற்றியையும் அதிர்ஷ்டத்தையும் கொண்டுவரும் எண் என்றும் திரு ருபானி பல முறை மெச்சியதாக நிறுவனம் கூறியது.

1206 என்ற எண்களைக் கொண்ட நேற்றையத் தேதியில் (12 ஜூன்), அவர் காலமானார்.

லண்டனில் இருக்கும் குடும்பத்தாரைச் சந்திப்பதற்காகத் திரு ருபானி பயணம் மேற்கொண்டபோது விபத்து ஏற்பட்டதாக The Hindu செய்தி நிறுவனம் சொன்னது.
ஆதாரம் : Others/The Hindu

மேலும் செய்திகள் கட்டுரைகள்