Skip to main content
நடுவானில் ஆட்டங்கண்ட ஏர் இந்தியா விமானம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

நடுவானில் ஆட்டங்கண்ட ஏர் இந்தியா விமானம் - 17 பேர் காயம்

வாசிப்புநேரம் -
நடுவானில் ஆட்டங்கண்ட ஏர் இந்தியா விமானம் - 17 பேர் காயம்

(கோப்புப் படம்: AFP)

வெளியீடு : 05 Aug 2026 02:52PM புதுப்பிப்பு : 05 Aug 2026 03:34PM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஏர் இந்தியா AI2379 விமானம் நடுவானில் ஆட்டங்கண்டதில் பயணிகளும் சிப்பந்திகளும் காயமடைந்தனர்.

சம்பவம் நேற்றுக் காலை நடந்தது.

விமானம் தாய்லந்தின் புக்கெட் (Phuket) தீவிலிருந்து இந்தியத் தலைநகர் புதுடில்லிக்குச் சென்றுகொண்டிருந்தது.

அதில் 134 பயணிகள் இருந்தனர்.

விமானம் நடுவானில் சுமார் 300 மீட்டர் கீழிறங்கி ஆட்டங்கண்டதாகக் கூறப்பட்டது.

4 சிப்பந்திகள் உட்பட 17 பேர் காயமடைந்தனர். அவர்களில் ஒரு சிப்பந்திக்குக் கடுமையான காயம் ஏற்பட்டது என்று Times of India நாளிதழ் குறிப்பிட்டது.

இந்திய நேரப்படி நேற்றுக் காலை 11.30 மணிக்குப் விமானம் புதுடில்லியில் பத்திரமாகத் தரையிறங்கியது என்றும் அது சொன்னது.

காயமடைந்தோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உரிய ஆதரவு வழங்குவதாக ஏர் இந்தியா தெரிவித்தது.

சம்பவம் குறித்த விசாரணையில் ஒத்துழைப்பதாகவும் சொன்னது.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்