Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

விமானங்களின் எரிபொருள் கட்டுப்பாட்டு விசைகளைச் சோதிக்கும் Air India

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஏர் இந்தியா (Air India) நிறுவனம் அதன் 33 Boeing 787 ரக விமானங்களின் எரிபொருள் கட்டுப்பாட்டு விசைகளைச் சோதிக்கத் தொடங்கியுள்ளது.

நேற்று முன்தினம் (2 பிப்ரவரி) அதன் Boeing 787-8 Dreamliner விமானத்தின் எரிபொருள் கட்டுப்பாட்டு விசைகளில் கோளாறு இருக்கலாம் என்று விமானி தெரிவித்தார்.

அதை அடுத்து அந்த விமானத்தின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன.

அது குறித்து Boeing நிறுவனத்திற்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா கூறியது.

எனினும் அந்த விமானத்தின் எரிபொருள் கட்டுப்பாட்டு விசைகளில் எந்தக் கோளாறும் இல்லை என்று இந்தியாவின் விமானத்துறைக் கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்தது.

எரிபொருள் கட்டுப்பாட்டு விசைகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டதால் பிரச்சினை ஏற்பட்டதாகவும் அது சொன்னது.

சென்ற ஆண்டு இந்தியாவின் அகமதாபாத் நகரிலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் விமானத்தில் இருந்த 241 பேர் மாண்டனர்.

ஒருவர் மட்டுமே உயிர்பிழைத்தார்.

விமானம் புறப்பட்ட சில நொடிகளில் அதன் எரிபொருள் கட்டுப்பாட்டு விசை முடக்கப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்தது.

ஆதாரம் : AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்