Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

தாய்லந்தின் புக்கெட் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

வாசிப்புநேரம் -
தாய்லந்தின் புக்கெட் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

படம்: AFP/Raveendran

தாய்லந்தின் புக்கெட் நகரிலிருந்து புதுடில்லிக்குச் சென்றுகொண்டிருந்த ஏர் இந்தியா விமானச்சேவை AI 379க்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து விமானம் புக்கெட்டில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

விமானத்தில் 156 பயணிகள் இருந்ததாக Reuters செய்தி நிறுவனம் தெரிவித்தது.

அனைத்துப் பயணிகளும் விமானத்திலிருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

தாய்லந்து அதிகாரிகள் தீவிரமாகச் சோதனை நடவடிக்கை மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில், விமானத்தில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை.

வெடிகுண்டு மிரட்டல் குறித்த குறிப்பு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அதனைக் கண்டுபிடித்த பயணி விசாரிக்கப்படுகிறார்.
ஆதாரம் : Reuters

மேலும் செய்திகள் கட்டுரைகள்