Skip to main content
Air India விமானிகளுக்குக் கட்டாய போதைப்பொருள் சோதனை: AFP
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

Air India விமானிகளுக்குக் கட்டாய போதைப்பொருள் சோதனை: AFP

வாசிப்புநேரம் -
Air India விமானிகளுக்குக் கட்டாய போதைப்பொருள் சோதனை: AFP

(கோப்புப் படம்: AFP)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 14 Aug 2026 11:20AM புதுப்பிப்பு : 14 Aug 2026 11:45AM
ஏர் இந்தியா (Air India) நிறுவனம், தனது விமானிகள் அனைவருக்கும் கட்டாய போதைப்பொருள் சோதனையைத் தொடங்கியிருக்கிறது.

AFP செய்தி நிறுவனம் அதைத் தெரிவித்தது.

முன்னதாக ஆண்டுதோறும் விமான ஊழியர்களில் குறைந்தது 10 விழுக்காட்டினர் தற்செயலாகத் தேர்வு செய்யப்பட்டு போதைப்பொருள் சோதனைக்கு ஆட்படுத்தப்பட்டனர்.

தற்போது விமானிகள் அனைவருக்கும் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நேற்று (13 ஆகஸ்ட்) புதிய நடைமுறை நடப்புக்கு வந்தது.

இம்மாதம் 4ஆம் தேதி தாய்லந்தின் புக்கெட் நகரிலிருந்து புதுடில்லிக்குப் புறப்பட்ட விமானம் வானில் திடீரென 300 அடி இறங்கியது.

சம்பவத்தில் 24 பயணிகள் காயமுற்றனர்.

விமானி கஞ்சா உட்கொண்டிருந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.

போதைப்பொருள் சோதனை முடிவுகள் பகிரப்படவில்லை என்று ஏர் இந்தியா கூறியது.

சம்பவம் தொடர்பான ஆதாரங்களை ஆராய்வதாக இந்திய விசாரணையாளர்கள் தெரிவித்தனர்.
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்