Skip to main content
கழிப்பறைத் தொட்டியில் பிளாஸ்டிக் பைகள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

கழிப்பறைத் தொட்டியில் பிளாஸ்டிக் பைகள் - திருப்பிவிடப்பட்ட Air India விமானம்

வாசிப்புநேரம் -
அமெரிக்காவிலிருந்து புறப்பட்ட Air India விமானம் மீண்டும் விமான நிலையத்துக்குத் திருப்பிவிடப்பட்டது.

டில்லிக்குப் புறப்பட்ட விமானத்தின் கழிப்பறைத் தொட்டிகளில் பிளாஸ்டிக் பைகளும் துணிகளும் நிரம்பியிருந்ததாக BBC செய்தி நிறுவனம் சொன்னது.

342 பயணிகள் வரை இருக்கக்கூடிய அந்த விமானம் புறப்பட்ட 2 மணி நேரத்தில் சம்பவம் நடந்தது.

12 கழிப்பறைகளில் 8ஐப் பயன்படுத்தமுடியாது என்று சிப்பந்திகள் அறிந்தனர்.

பயணிகளின் வசதியைக் கருத்தில்கொண்டு விமானத்தைத் திருப்பிவிட்டதாக Air India சொன்னது.

சிக்காகோ (Chicago) நகருக்குத் திரும்பிய பயணிகளுக்கு தங்குமிடமும் மாற்று விமானங்களும் ஏற்பாடு செய்யப்பட்டன.

கழிப்பறைகளை முறையாகப் பயன்படுத்தும்படி Air India நிறுவனம் பயணிகளுக்கு நினைவூட்டியுள்ளது.

சம்பவத்தையொட்டி இணையவாசிகள் பலர் கருத்துரைத்தனர்.

Air India சேவையில் முறையான வசதிகள் இல்லை என்று சிலர் குறைகூறினர்.

அதற்கு விமானம் மட்டுமே பொறுப்பேற்கமுடியாது; பயணிகள் முறையாக நடந்துகொள்ளவில்லை என்று மற்ற சிலர் கூறினர்.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்