1,100 விமானப் பயணங்களை ரத்துச்செய்யும் Air New Zealand
வாசிப்புநேரம் -
நியூசிலந்தின் தேசிய விமான நிறுவனம் அடுத்த இரண்டு மாதங்களில் 1,100 விமானப் பயணங்களை ரத்துச்செய்யப்போவதாகத் அறிவித்துள்ளது.
அந்த எண்ணிக்கை விமானப் பயணங்களில் சுமார் 5 விழுக்காடு; இதனால் 44,000 பயணிகள் பாதிக்கப்படுவார்கள் என்றது நிறுவனம்.
மத்திய கிழக்குப் போர்ச்சூழலால் அந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக Air New Zealand சொன்னது.
ரத்துச்செய்யப்படும் விமானச் சேவைகளில் பெரும்பாலானவை உள்ளூர்ப் பயணங்கள்.
சில அனைத்துலகப் பயணங்களும் ரத்துச்செயப்படுகின்றன.
நியூசிலந்து - அமெரிக்கா இடையிலான விமானப் பயணம் பாதிக்கப்படாது என்று நிறுவனம் சொன்னது.
மத்திய கிழக்குப் போரினால் எரிபொருள் விலை ஏற்றம் கண்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள விமான நிறுவனங்கள் கட்டணத்தையும் பயண அட்டவணைகளையும் சரிசெய்து வருகின்றன. கணிசமாக அதிகரித்துள்ள அந்தச் செலவின் தாக்கத்தைச் சமாளிக்கப் பயணங்களை ரத்துச்செய்யும் நடவடிக்கை உதவும் என்று Air New Zealand நம்புகிறது.
விமான எரிபொருள் விலை பீப்பாய்க்குச் சுமார் 85 டாலருக்கு விற்கப்படும். ஆனால் தற்போது அந்த விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளதாக நிறுவனம் கூறியது.
Air New Zealand எல்லாப் பயணங்களுக்கும் விமானச்சீட்டுகளின் விலையையும் உயர்த்தியிருக்கிறது.

ஆதாரம் : AFP