Skip to main content
புதுடில்லியில் புகைமூட்டம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

புதுடில்லியில் புகைமூட்டம் - மோசமடைந்துள்ள காற்றின் தரம்

வாசிப்புநேரம் -
புதுடில்லியில் புகைமூட்டம் - மோசமடைந்துள்ள காற்றின் தரம்

(படம்: AP/Manish Swarup)

இந்தியத் தலைநகர் புதுடில்லியில் நிலவும் புகைமூட்டத்தால் காற்றின் தரம் மோசமான நிலையில் உள்ளது.

நிலைமையைச் சமாளிக்க இன்று புதிய கட்டுப்பாடுகள் நடப்பிற்கு வந்துள்ளன.

10ஆம், 12ஆம் வகுப்பு மாணவர்களைத் தவிர மற்ற நிலைகளில் பயிலும் பெரும்பாலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன.

அலுவலகங்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறைக்கு மாற உத்தரவிடப்பட்டிருக்கின்றன.

அத்தியாவசியமற்ற வர்த்தக நடவடிக்கைகளை முடக்குவது பற்றியும் அதிகாரிகள் பரிசீலிக்கக்கூடும்.

அத்தியாவசியமற்ற கட்டுமானப் பணிகள் ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ளன.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்திலும் அதே நிலை.

லாகூரில் காற்றின் தரம் சற்று மேம்பட்டிருந்தாலும் அது தொடர்ந்து ஆரோக்கியமற்ற நிலையில் உள்ளது.
ஆதாரம் : AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்