Skip to main content
புகை பிடிக்காதவர்களிடையே நுரையீரல் புற்றுநோய்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

புகை பிடிக்காதவர்களிடையே நுரையீரல் புற்றுநோய் - ஏன் ஏற்படுகிறது?

வாசிப்புநேரம் -
புகை பிடிக்காதவர்களிடையே நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்குப் புகைமூட்டம் முக்கிய காரணமாய் இருப்பதாய் ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

குறிப்பாகத் தென்கிழக்காசியாவில் இருப்பவர்களும் பெண்களும் அதிகம் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

2022இல் 2.5 மில்லியன் பேர் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாக Lancet நுரையீரல் மருத்துவச் சஞ்சிகை சொல்கிறது.

அதில் ஆக அதிகமானோர் ஆண்களாக இருந்தாலும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து, கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பேராக உள்ளது.

adenocarcinoma எனும் அந்த வகை நுரையீரல் புற்றுநோய், 185 நாடுகளின் பெண்களிடையே பரவலாகக் காணப்படுகிறது.

உலகில் புகைபிடிக்காத 53இலிருந்து 70 விழுக்காட்டினருக்கு அது ஏற்படுவதாகவும் காற்றுத் தூய்மைக்கேடு அதற்கு முக்கிய காரணம் என்றும் ஆய்வில் குறிப்பிடப்பட்டது.
ஆதாரம் : AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்