Skip to main content
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரி.. யார் இவர்?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரி.. யார் இவர்?

வாசிப்புநேரம் -
அண்மையில் இந்தியாவின் மும்பை விமான நிலையத்தின் ஒரே ஓடுபாதையில் Indigo விமானம் தரையிறங்கும் அதே நேரம் Air India விமானம் ஒன்று புறப்படவிருந்தது.

நல்ல வேளையாக விபத்து எதுவும் ஏற்படவில்லை...

இரு விமான நிறுவனங்களும் புறப்படவும் தரையிறங்கவும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரி அனுமதி வழங்கியதாகத் தெரிவித்திருந்தன.

அந்த அதிகாரி பின்னர் வேலையிலிருந்து நீக்கப்பட்டார்.

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரி...

யார் இவர்?

இவரது பொறுப்புகள் என்னென்ன?

இவர் பொறுப்பை ஒழுங்காகச் செய்யத் தவறினால் என்ன நடக்கும்?

விவரங்களைத் திரட்டியது 'செய்தி'.

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரி விமானப் போக்குவரத்தைக் கண்காணிப்பவர்.

ஒரே நேரத்தில் ஒரே ஓடுபாதையில் விமானங்கள் தரையிறங்குவதையும் புறப்படாமல் இருப்பதையும் அவர் சரிபார்க்க வேண்டும். விபத்துகள் ஏற்படாமல் இருப்பதைக் கவனிப்பது முக்கியம்.

எல்லா நேரங்களிலும் விமானங்களுக்கிடையே பாதுகாப்பான இடைவெளி இருப்பதை அவர் உறுதி செய்யவேண்டும்.

விமானிகள் தரையிறங்குவதற்கும் புறப்படுவதற்கும் முன்னர் அவரிடமிருந்து அனுமதி பெறுவர்.

விமானம் தாமதமாகப் புறப்படாமல் இருப்பதையும் அதிகாரி கவனித்துக்கொள்ளவேண்டும்.

பயணிகள், விமான ஊழியர்கள் ஆகியோரின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு அவர் முடிவெடுக்கவேண்டும்.

அதிகாரி வேலை செய்யும்போது விமானப் போக்குவரத்தை உன்னிப்பாகக் கவனிக்கவேண்டும்.

அவரது கவனம் சிதறினால் விமானங்கள் மோதிக்கொள்ளலாம்; விபத்துகள் ஏற்படலாம்.

இன்றையக் காலக்கட்டத்தில் விமானப் போக்குவரத்து அதிகரித்துக் கொண்டிருக்கையில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரியின் பணி மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்