Skip to main content
"628 Airbus விமானங்கள் சோதிக்கப்பட வேண்டும்"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

"628 Airbus விமானங்கள் சோதிக்கப்பட வேண்டும்"

வாசிப்புநேரம் -
"628 Airbus விமானங்கள் சோதிக்கப்பட வேண்டும்"
(படம்: PASCAL PAVANI / AFP)
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

உலகெங்கும் உள்ள A320 ரக விமானங்களில் 628 விமானங்கள் சோதிக்கப்பட வேண்டும் என்று ஏர்பஸ் (Airbus) நிறுவனம் தெரிவித்துள்ளது.

அவற்றின் உலோகத் தகட்டின் தரத்தில் குறை இருக்கலாம் என்று அது கூறியது.

சோதனைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட விமானங்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டிருப்பதாக அர்த்தம் இல்லை என்று நிறுவனம் சொன்னது.

சோதனை செய்யப்பட வேண்டிய விமானங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைவதாகவும் அது குறிப்பிட்டது.

தரப் பிரச்சினையால் சில A320 விமானங்களின் விநியோகமும் தாமதமடைந்துள்ளது.

Airbus நிறுவனத்தின் பங்குவிலை சரிந்தது.

சுமார் 6,000 A320 ரக விமானங்களில் மென்பொருள் மேம்பாடு செய்த பின்புதான் மீண்டும் பறக்க வேண்டும் என்று Airbus சென்ற வாரம் தெரிவித்திருந்தது.

A320 உலகில் ஆக அதிகமாக விற்பனை செய்யப்படும் விமானம்.

அது 1988ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது.

இந்த ஆண்டு (2025) செப்டம்பர் இறுதிவரை 12,257 A320 விமானங்கள் விற்கப்பட்டுள்ளன.
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்