Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

இணையக் கோளாறு காரணமாக அனைத்துச் சேவைகளும் ரத்து: அலாஸ்கா ஏர்லைன்ஸ்

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

அமெரிக்காவின் அலாஸ்கா ஏர்லைன்ஸ் (Alaska Airlines) விமான நிறுவனம் இணையக் கோளாறு காரணமாக அதன் சேவைகளை ரத்து செய்துள்ளது

உள்ளூர் நேரப்படி நேற்றிரவு ஏற்பட்ட கோளாறு காரணமாக அதன் கணினிக் கட்டமைப்பு பாதிக்கப்பட்டதாக அலாஸ்கா ஏர் (Alaska Air) குழுமம் தெரிவித்தது.

எனவே தற்காலிகமாக அனைத்து விமானச் சேவைகளையும் ரத்து செய்வதாக அது கூறியது.

மேல்விவரங்களை அது வெளியிடவில்லை.

சுமார் 300 விமானங்களைக் கொண்டுள்ளது அலாஸ்கா ஏர் குழுமம்.

கடந்த மாதம் நடந்த இணைய ஊடுருவலால் அந்நிறுவனத்துக்குச் சொந்தமான ஹவாயியன் ஏர்லைன்ஸின் (Hawaiian Airlines) விமானச் சேவைகள் பாதிப்புக்குள்ளாகின.

ஊடுருவல் காரணமாக ஏற்பட்ட பொருளாதார இழப்பை இன்னும் கணக்கிடுவதாக நிறுவனம் குறிப்பிட்டது.
 

மேலும் செய்திகள் கட்டுரைகள்