Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

சர்ச்சைக்கு மத்தியில் தங்கம் வென்ற அல்ஜீரிய குத்துச்சண்டை வீராங்கனை

வாசிப்புநேரம் -
அல்ஜீரியாவின் (Algeria) குத்துச்சண்டை வீராங்கனை இமான் கெலிஃப் (Imane Khelif) ஒலிம்பிக் போட்டியின் இறுதிச்சுற்றில் சீனாவைச் தோற்கடித்துத் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

66 கிலோகிராம் எடை பிரிவின் இறுதிச்சுற்று நேற்று (9 ஆகஸ்ட்) நடந்தது.

ஒலிம்பிக் தேர்வுச் சுற்றில் இத்தாலியின் ஏஞ்சலா காரினியை (Angela Carini) வெறும் 46 விநாடிகளில் இமான் தோற்கடித்தார்.

அது பெருமளவில் சர்ச்சையைக் கிளப்பியது.

முன்னர் இமான் மேற்கொண்ட பாலின பரிசோதனையின்போது முடிவுகள் அவருக்குச் சாதகமாக அமையவில்லை என்று கூறிச் சிலர் அவரை ஓர் 'ஆண்' என்று அழைத்தனர்.

அதனையடுத்து ஒலிம்பிக் குழு இமான் பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் பங்கெடுக்க தகுதியுடையவர் என்று பலமுறை கூறி உறுதிப்படுத்தியது.
ஆதாரம் : CNN

மேலும் செய்திகள் கட்டுரைகள்