Skip to main content
Alibaba, Baidu ஆகியவை ராணுவ நிறுவனங்களா?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

Alibaba, Baidu ஆகியவை ராணுவ நிறுவனங்களா?

வாசிப்புநேரம் -
Alibaba, Baidu ஆகியவை ராணுவ நிறுவனங்களா?

AFP

வெளியீடு : 14 Feb 2026 12:48PM புதுப்பிப்பு : 14 Feb 2026 01:22PM

அமெரிக்கா Alibaba, Baidu போன்ற பெரிய சீன நிறுவனங்களை ராணுவ நிறுவனங்களாக வகைப்படுத்திய பட்டியலை வெளியிட்ட சிறிது நேரத்தில் அதனை மீட்டுக்கொண்டுள்ளது. 

அமெரிக்கத் தற்காப்பு அமைச்சின் பட்டியலில் BYD மின்வாகன நிறுவனம், WuXi AppTec நிறுவனம், செயற்கை நுண்ணறிவில் இயங்கும் மனித இயந்திரக் கருவி நிறுவனமான RoboSense ஆகியவையும் இடம்பெற்றிருந்ததாகத் தெரிகிறது.

அமெரிக்கா பொதுமக்களின் பார்வையில் இருந்து அந்தப் பட்டியலை  அகற்றியதற்குக் கொள்கை மாற்றம் காரணமா என்பது தெரியவில்லை.

வெள்ளை மாளிகையும், வாஷிங்டனில் இருக்கும் சீனத் தூதரகமும் உடனடியாகக் கருத்து சொல்லவில்லை. 

புதிய சட்டத்தின்படி ராணுவ நிறுவனமாகப் பட்டியலிடப்படும் நிறுவனங்களில் இருந்து அமெரிக்கத் தற்காப்பு அமைச்சு அடுத்த சில வருடங்களுக்கு ஒப்பந்தம் செய்யவும் சாதனங்களை வாங்கவும் அனுமதியில்லை.  

இந்நிலையில் ராணுவ நிறுவனமாக வகைப்படுத்தப்பட்டதற்குச் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக Alibaba மிரட்டியுள்ளது.

ஆதாரம் : AGENCIES

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்