Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சிங்கப்பூரில் தயாரிக்கப்பட்ட முக்கிய பாகத்தோடு விண்ணுக்கு ஏவப்பட்ட செயற்கைத் துணைக்கோள்

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் தயாரிக்கப்பட்ட முக்கிய பாகத்தோடு விண்ணுக்கு ஏவப்பட்ட செயற்கைத் துணைக்கோள்

படம்: ALIENA

சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று வடிவமைத்து உருவாக்கிய முக்கிய பாகத்தை உள்ளடக்கிய மிகச் சிறிய செயற்கைத் துணைக்கோள் ஒன்று விண்ணில் பாய்ச்சப்பட்டுள்ளது.

அமெரிக்காவில், நேற்றிரவு அது விண்ணுக்கு ஏவப்பட்டது.

விண்வெளியில் சிறிய செயற்கைக்கோள்களுக்கு அதிகரித்துள்ள தேவை, சிங்கப்பூரில் உள்ள புதிய நிறுவனங்களுக்குச் சாதகமாக அமைந்துள்ளது.

செயற்கைக்கோள் தனது சுற்றுப்பாதையில் உள்ள
தொலைதூரப் பகுதிகளுக்கு இணையச் சேவைகளை வழங்கும்.

அந்தச் செயற்கைத் துணைக்கோளில், Nanyang தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய Aliena நிறுவனம் உருவாக்கியுள்ள, இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.

அது, எரிபொருளைக் குறைவாகப் பயன்படுத்தும்.

துணைக்கோளம் வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவப்பட்டதைத் தொடர்ந்து, வேகமாக மாறிவரும் விண்வெளித் துறையில் சிங்கப்பூர் தனக்குரிய இடத்தைப் பிடிக்குமென Aliena நம்புகிறது.

அந்த நிறுவனத்தின் இயந்திரங்களைப் பிற செயற்கைத் துணைக்கோள்களில் பயன்படுத்த மற்ற நிறுவனங்கள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளதாகவும் கூறப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa