Skip to main content
பயணிகளின் தங்குமிட, உணவுச் செலவுகள் ஏற்றுக்கொள்ளப்படும்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

பயணிகளின் தங்குமிட, உணவுச் செலவுகள் ஏற்றுக்கொள்ளப்படும் - ஐக்கிய அரபுச் சிற்றரசுகள்

வாசிப்புநேரம் -
பயணிகளின் தங்குமிட, உணவுச் செலவுகள் ஏற்றுக்கொள்ளப்படும் - ஐக்கிய அரபுச் சிற்றரசுகள்
Fadel SENNA / AFP

மத்திய கிழக்கிலிருந்து வெளியேற முடியாமல் உள்ள பயணிகளின் செலவுகளை ஏற்றுக்கொள்ளவிருப்பதாக ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் அறிவித்துள்ளது.

கலீஜ் டைம்ஸ் செய்தி நிறுவனம் அந்தத் தகவலை வெளியிட்டது.

சுமார் 20,200 பயணிகள் தற்போது ஐக்கிய அரபுச் சிற்றரசுகளிலிருந்து வெளியேற முடியாமல் தவிக்கின்றனர்.

அவர்களுக்கான தங்குமிட, உணவுச் செலவுகளை ஏற்றுக்கொள்ளவிருப்பதாக ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் கூறியது.

அத்தகைய பயணிகளுக்காகத் துபாயில் உள்ள சில ஹோட்டல்கள், கார் நிறுத்துமிடங்களில் நூற்றுக்கணக்கான மெத்தைகள் வைக்கப்பட்டுள்ளன.

3 வேளை உணவு வழங்கப்படுகிறது.

பயணிகளைப் பத்திரமாக அந்தந்த நாடுகளுக்குத் திருப்பியனுப்ப விமான நிலையங்களுடனும் தேசிய விமான நிறுவனங்களுடனும் இணைந்து பணியாற்றுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

வேறு விமானங்களில் அவர்கள் பயணம் செய்வதற்கான ஏற்பாடுகளையும் கவனித்து வருவதாகக் கூறப்பட்டது.

ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்