Skip to main content
உயிருடன் இருக்கும் அனைத்து இஸ்ரேலியப் பிணையாளிகளும் விடுதலை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

உயிருடன் இருக்கும் அனைத்து இஸ்ரேலியப் பிணையாளிகளும் விடுதலை

வாசிப்புநேரம் -
உயிருடன் இருக்கும் அனைத்து இஸ்ரேலியப் பிணையாளிகளும் விடுதலை

படம்: AFP

ஹமாஸ் மேலும் 13 இஸ்ரேலியப் பிணையாளிகளை விடுதலை செய்துள்ளது.

அவர்களை ஹமாஸ் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைத்துள்ளது.

அந்த 13 பேரையும் சேர்த்து உயிருடன் இருக்கும் 20 பிணையாளிகளும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அதற்குப் பரிமாற்றமாக இஸ்ரேல் 1,950 பாலஸ்தீனக் கைதிகளை விடுவிக்க ஆயத்தமாகிறது. அவர்களில் 250 பேருக்கு இஸ்ரேலியர்களைத் தாக்கியதன் தொடர்பில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. எஞ்சிய 1,700 பேர் காஸாவில் போரின் போது கைப்பற்றப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.

மேற்குக் கரையிலிருக்கும் ஒஃபெர் (Ofer) ராணுவச் சிறைச்சாலைக்கு வெளியே லாரிகள் நின்றுகொண்டிருக்கும் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதற்கிடையே அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் இஸ்ரேலுக்குச் சென்றுள்ளார். அவருக்கு அமோக வரவேற்பு.
ஆதாரம் : AGENCIES

மேலும் செய்திகள் கட்டுரைகள்