Skip to main content
நடிகர் அல்லு அர்ஜூன் கைது
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

நடிகர் அல்லு அர்ஜூன் கைது

வாசிப்புநேரம் -
இந்தியாவின் ஹைதராபாத்தில் கூட்ட நெரிசலில் மிதிபட்டு மாண்ட ரேவதியின் வழக்குத் தொடர்பில் 'புஷ்பா 2' திரைப்பட நடிகர் அல்லு அர்ஜூன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

'புஷ்பா 2' திரைப்படத்தைப் பார்க்கச் சென்ற ரேவதி கூட்ட நெரிசலில் மிதிபட்டு மாண்டார்.

அந்தச் சம்பவம் இம்மாதம் (டிசம்பர்) 4ஆம் தேதி நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

காவல்துறை அதிகாரிகள் சிலர் நடிகர் அல்லு அர்ஜூன் வீட்டிற்குச் சென்று அவரைக் கைதுசெய்தனர்.

அவர் தற்போது காவல் நிலையத்தில் இருப்பதாக Hindustan Times தெரிவித்தது.

அங்கு அவர் விசாரிக்கப்படுவார் என்று காவல்துறை குறிப்பிட்டது.

நடிகர் அல்லு அர்ஜூன், அவரின் பாதுகாப்புக் குழுவினர், திரையரங்கின் நிர்வாகக் குழுவினர் ஆகியோர் மீது ரேவதியின் குடும்பத்தார் புகார் கொடுத்துள்ளதாக அது சொன்னது.

நடிகர் அல்லு அர்ஜூன் உயர் நீதிமன்றத்திடம் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

அவருடைய வழக்கை நீதிமன்றம் அடுத்த சில நாள்களில் விசாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாண்ட பெண்ணின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய்
(40,000 வெள்ளி) வழங்கவிருப்பதாக சில நாள்களுக்கு முன்பு நடிகர் அல்லு அர்ஜூன் கூறியிருந்தார்.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்