விலங்கியல் தோட்டத்தில் தப்பிய விலங்குகள்
வாசிப்புநேரம் -
படம்: GREG BAKER / AFP
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சீனாவின் விலங்கியல் தோட்டத்திலிருந்து சுமார் 100 விலங்குகள் தப்பியுள்ளன.
குவாங்ஸி (Guangxi) வட்டாரத்த்தில் அந்தச் சம்பவம் நடந்தது.
சில நாள்களுக்கு முன் 'மாய்சாக் (Maysak) சூறாவளி சீனாவின் தெற்கு, மத்தியப் பகுதிகளைத் தாக்கியது.
அதில் 39 பேர் மாண்டனர்.
130,000 பேர் வெளியேற்றப்பட்டனர்.
கனத்த மழை காரணமாகப் பல பகுதிகளில் வெள்ளம்.
Guigang விலங்குத் தோட்டமும் பெரிதளவில் பாதிக்கப்பட்டது.
தொடர்ந்து பெய்த கனமழையால் சில கூண்டுகள் சேதமடைந்தன.
விலங்குகள் தப்பிவிட்டன.
2 ரக்கூன் (racoon), 4 முள்ளம்பன்றி, 30 மயில் ஆகியவை அதில் அடங்கும்.
விலங்குகளைக் கண்டுபிடிக்க உதவும்படி விலங்கியல் தோட்டம் பொதுமக்களைக் கேட்டுக்கோண்டது.
தப்பிய விலங்குகள் பயந்துபோயிருக்கலாம்.
அவை முரட்டுத்தனமாக நடந்துகொள்ளும் சாத்தியமும் உண்டு.
அவற்றைக் கண்டால் அருகே செல்லவோ பிடிக்க முயற்சி செய்யவோ வேண்டாம் என்று விலங்குத் தோட்டம் எச்சரித்தது.

ஆதாரம் : AFP