Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

தேன் நிலவின்போது மனைவியைக் கொலைசெய்த அமெரிக்க ஆடவருக்கு ஆயுள் தண்டனை

வாசிப்புநேரம் -
தேன் நிலவிற்காக பிஜிக்குச் (Fiji) சென்றபோது தமது மனைவியைக் கொலைசெய்த அமெரிக்க ஆடவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

40 வயது பிரேட்லி ராபர்ட் டாசன் (Bradley Robert Dawson) குறைந்தது 18 ஆண்டுகள் சிறையில் இருந்த பின்னரே அவரது விடுதலை குறித்த பரிசீலனை மேற்கொள்ளப்படும் என்று பிஜி உயர்நீதிமன்றம் தெரிவித்தது.

சம்பவம் 2022ஆம் ஆண்டு நடந்தது.

தமது மனைவி கிரிஸ்ட்டி சென்னைக் (Christe Chen) கொலைசெய்துவிட்டு அருகில் உள்ள தீவிற்கு டாசன் தப்பிச் சென்றதாக நம்பப்படுகிறது.

தம்பதி தங்கியிருந்த ஹோட்டல் அறையில் தலையில் பலத்த காயங்களுடன் சென் மாண்டுகிடந்தார்.

நீதிமன்ற விசாரணையின்போது டாசன் குற்றத்தை மறுத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் அவரைத் தவிர்த்து வேறு யாரும் அந்தக் குற்றத்தைப் புரிந்திருக்கச் சாத்தியம் இல்லை என்று உறுதியாக நம்புவதாக நீதிபதி கூறினார்.
ஆதாரம் : CNN

மேலும் செய்திகள் கட்டுரைகள்